உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 44

காணப்படும்

தொழிலாளியின் சூழ்நிலைகளில்

நிலைமையிது. ஆனால், முதலாளிகள் நாம் மேற்குறிப்பிட்ட மதிப்புரையை ஏற்பத்தில்லை. அவர்கள் கூறுவதாவது: தொழிலாளிகள் முதலாளிகளைச் சார்ந்து வாழ்கின்றனர் என்பது தவறு. அடிமை வாழ்வு என்று அவர்கள் வாழ்வைக் குறிப்பதற்கேயிடமில்லை. இருவரும் சம நிலையிலேயே தொடர்பு கொண்டுள்ளனர். தொழிலாளிகள் முதலாளிகளை எந்த அளவுக்குச் சார்ந்துள்ளனரோ அந்த அளவுக்கு முதலாளிகளும், தாழிலாளிகளைச் சார்ந்தே உள்ளனர்." முதலாளிகளின் இவ்வாதம் ஒரு உயிர்நிலையான உண்மையைப் புறக்கணித்து விடுகிறது.தொழிலாளிகள் வேலை செய்யாத காலத்தில் தனித்து நின்று வாழுவதற்கான வழிகளில்லாதவர்கள். அவர்கள் பேரம் செய்யும் ஆற்றலை இது பெரிதும் குறைத்து விடுகிறது. ந்நிலையில் முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்ட முடிவதில் வியப்பென்ன இருக்க முடியும்? மனித இயல்பு இருக்கும் நிலையில் இது இயற்கையேயாகும்.

முதலாளிகள் மேலும் கூறும் செய்தி 'வெளிச்சம், இயங்கும் இடம் ஆகிய வகையில் உடல் நலத்துக்கேற்ற குறைந்த அளவு இது என்று ஒவ்வொரு அரசாங்கமும் வரையறை செய்துள்ளதென்பதே: மற்றும் முதலாளிகளை எதிர்த்துக் கூட்டுப் பேரம் செய்து சரியான முன்னணியமைக்கும் வகையில் தொழிற் சங்கங்கள் அமைந்துள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், கடுந்துன்ப நேரங்களில், தொழிற் சங்கங்கள் ஆற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனுக்குக் கிட்டிய துரும்பு போல் வலுவற்றதாய் விடுகின்றன. அத்தகைய வேளைகளில் தொழிலாளர் எதிர்ப்பின் பலனாகப் பல எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதும் மறுக்கக்கூடாத உண்மை ஆகும்.

அடுத்தபடியாக இருதரப்பாரும் இணைந்து உற்பத்தி செய்யும் உற்பத்திச் செல்வத்தின் பங்கீடு பற்றி, அதாவது, நிலம் உழைப்பு, முதலீடு ஆகிய மூன்று கூறுகளின் ஒத்துழைப்பினால் ஏற்படும் செல்வம் அல்லது, தேசீய வருவாயின் பங்கீடு பற்றிக் கவனிப்போம். முதலாளித்துவ நாகரிகத்தின் கீழ் தொழிலாளி களுக்குத் தேசீய வருமானத்தில் தங்கள் நேர்மையான பகுதியின்