போதும் முதலாளித்துவம்
39
ஒரு சிறு அளவே கிடைக்கிறது. ஆகவே அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே வறுமைச் சேற்றில் கிடந்து உழலவேண்டிய வர்களாகிறார்கள். “முதலாளித்துவத்தின் கீழ் இக்குறை பாட்டுக்கு எதிராக உற்பத்தியாளரால் தரப்படும் வசதிகள் தொழிலாளர்களின் தேவையைக் கவனித்துத் தரப்படுபவையும் அல்ல; சமூகத்துக்குத் தொழிலாளிதரும் பொருள்களின் மதிப்பைக் கவனித்துத் தரப்படுபவையும் அல்ல; தொழிலாளர் உழைப்பாற்றல், விற்பனைக் களத்தில் வாங்கி விற்கும் ஒரு பொருளாயிருப்பதுடன், ஒவ்வொரு காலத்திலும் அதன்விலை, தேவை, தருவிப்பு, ஒழுங்குமுறையின்கீழ் (Unber the Law of supply and Demand) அறுதியிடப்படுவதாகவும் உள்ளது. நாளடைவில் எந்தவகையான உழைப்பின் கூலியும், அதன் உற்பத்திச் செலவுக்கு ஒத்தே போகிறது. இவ்வுழைப்பும் அதே உழைப்புக்குச் சமமான நீராவியாற்றல் அல்லது நீராற்றல் ஆகியவற்றைப் போல் மனிதத் தொடர்பற்ற ஒரு பொருளாக மதிக்கப்பட்டு விடுகிறது. தற்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பொருளியல் கோட்பாட்டின் விளக்கப்படி சொல்வதானால், முதலீடு, நிலம், உழைப்பு ஆகிய மூன்று உற்பத்தி சாதனங்களில், உழைப்பு, மற்ற இரண்டுடன் ஒத்த ஒர சாதனமாக மட்டுமே கருதப்படுகிறது.”
தொழிலாளர் துன்பமாவது அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த செல்வத்தின் ஒரு கூறினையே பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல. இதைவிடக் கொடுமையானது உழைக்கும் வகுப்பில்கூட அவன் நிலைமை, இன்று எங்கோ, நாளை எங்கோ என்ற உறுதியற்ற தன்மையாய் இருப்பதே. “முதலாளியின் விருப்பு வெறுப்புக்கு ஒருபுறமும் தொழில் உலகப் போக்கின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒருபுறமும் ஆக இருவகைப்பட்ட அடிமை நிலை காரணமாகவும் தம் தொழில் உழைப்புத் துறையிலிருந்து அதைவிடவும் கீழான ஏதேனும் ஒரு நிலைக்கோ அல்லது, தொழிலில்லாத் திண்டாட்டப் படைகளில் ஒருவனாகும் நிலைக்கோ போய்விட வேண்டி வருமோ என்றி இடைவிடாத அச்சம் காரணமாகவும் தொழிலாளி என்றும் கவலை நிறைந்தவனாகிறான்' (பெர்ன்ஸ்டீன்).
ம்
மேற்குறிப்பிட்ட கையழுத்த முறையை (Thumb-rule method) விட விஞ்ஞான நிர்வாக முறை சிறந்தது. தான் தொழிலாளர்கட்கு