உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போதும் முதலாளித்துவம்

41

அறைகள், நிலவரைகள், பரணிகள் ஆகியவை தரப்படுகின்றன. இவற்றில் நிலக்கசிவைத் தடுக்கவோ, கூரை ஒழுக்கைத் தடுக்கவோ, வகை கிடையாது. அவர்கள் வீடுகட்டப்படும் விதத்தில் உள்வரக் கூடாதவை வருவது மட்டுமல்ல, வெளிச் செல்ல வேண்டுபவை - நாற்றம், நச்சுக் காற்று - வெளிச் செல்லவும் முடிவதில்லை. பாலத்திலிருந்து காணப்படும் இக்காட்சி நாடெங்கும் காணப்படும் காட்சியின் ஒரு கூறுமட்டுமே. அவர்கள் வீடுகளின் கீழ்ப்புறமாக இடுங்கிய நாற்றமிக்க கரி நிறக்கால்வாயாகிய ‘இர்க்' ஓடுகிறது - அது அடித்துக்கொண்டு வரும் குப்பையும் கூளமும், ஆழம் குறைந்த அதன் வலது கரையோரத்தில் ஒதுக்கித் தள்ளப்படுகிறது. இந்த 'இர்க்' கால்வாயின் இருகரைகளும் திட்டமிட்டுகட்டப்பட்டவையல்ல. உண்மையில் அவை ‘இர்க்' அடித்துக் கொண்டுவந்து ஒதுக்கிய குப்பை கூளங்களால் உருவாகியவையே. வீடுகள் ஆங்காங்கு கந்தையின் முடிச்சுகள்போல் எழுந்து தோன்றும். மக்கள் வாழத்தக்க இடங்களின் கீழ்த்தர எல்லைகள் என இவற்றைக் கூறலாம். அவை உள்ளும் புறமும் ஒத்த அருவருப்பு உடையவை.

"தற்கால சமூகத்தின் புத்துலக அடிமைகளாகிய தொழிலாளர் வறுமை நிலையைப் பார்த்தால், அவர்கள் சேரிகள், அவர்கள் பக்கத்திலுள்ள பன்றிக்கூட்டங்களை, விட நேர்த்தியாயில்லை யென்றால், அதற்காக அவர்களை யாரும்

குறை கூற முடியாது. எனது இவ்வர்ணனை மிக்க

கோரமானதேயாயினும், இச்சேரியின் அழுக்கு, அழிபாடு, வாழ்க்கைக்கு மாறுபட்ட நிலைகள், தூய்மையின் வாடைக்குமிட மில்லாமை, காற்றோட்டமின்மை ஆகியவற்றின் கோரத்தை ஓரளவேனும்-மனக்கண்முன் கொண்டுவர இவ்விரிவுறைகூட ஒரு சிறிதும் போதாதது ஆகும்."

இன்றைய சமதர்மிகள் பலரும் இதே போன்ற இருண்ட சித்திரங்கள் வரைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளின் தவறாத பயன் ஒன்றே - மனிதன் உயிராற்றல் இற்று விடுவதும், தொற்று நோய்களுக்கு அவர்கள் எளிதில் லக்காகி இரையாவதுமே.

இச்சூழ்நிலைகளால் தொழிலாளர் மன உணர்ச்சி நிலைகளில் ஏற்படும் தாக்குதல் உண்மையில் மிகவும்