42
அப்பாத்துரையம் - 44
தீமையானதேயாகும். “மயக்கந்தருங் குடி வகைகளில் மட்டுக்கு மிஞ்சி யீடுபடும் கெட்ட குணத்துக்கு அடுத்தபடியாக ஆங்கில நாட்டுத்தொழிலாளரிடையே காணப்படும் பெருங்கேடு,ஆண் பெண் பாலரின் தொடர்பில் ஏற்படும் வரம்பற்ற தன்மையாகும். ஆனால் இதுவும் தன் சுதந்திரத்தைச் சரிவரப் பயன்படுத்துவதற் கான வாய்ப்புக்களில்லாமல் பாதுகாப்பின்றி விடப்பட்ட ஒரு வகுப்பில் அந்நிலையின் இன்றியமையாப் பயனாய் ஏற்படும் காரண காரியத் தொடர்பான இயற்கை விளைவே. இன்ப வகுப்பினர் உழைக்கும் வகுப்புக்கு அனுமதிக்கும் இன்பங்கள் இந்த இரண்டு மட்டுமே அவர்கள் மீது சுமத்தும் கடமைகளும் கடுமைகளும் மிகப்பல. எனவேதான் வாழ்க்கை இன்பத்தில் தமக்கு அனுமதிக்கப்படும் இச்சிறு பகுதியையேனும் முழு அளவில், துய்க்க எண்ணி, அவர்கள் அதில் தம் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தி வரம்புக்கு மிஞ்சிய இன்பத்துள், அமிழ்ந்து தம் நிலையழிகின்றனர்."
-
இதே ஆசிரியர் மேலும் கூறுவதாவது. “சமூக அமைப்பு முறையில் உழைப்பாளிக்குக் குடும்ப வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாய் போய்விடுகிறது. இன்ப வசதிகள் எதுவுமற்ற வீடு மக்கள் கூட்டமாக நெருங்கி வாழ்வதால் புழுக்கமும் நச்சுக்காற்றும் நிறைந்த அறை ஆகிய இவற்றிடையே வீட்டு வாழ்வில் இன்பம் இருக்க முடியாது. கணவன் பகல் முழுவதும் வேலை செய்கிறான். பல இடங்களில் மனைவியும் மூத்த பிள்ளைகளும், தனித்தனி வேறிடங்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் காலையும் மாலையும் மட்டுமே சந்திக்கின்றனர் - அப்போதும் குடித்து அயர்ச்சி தீர்க்கும் அவாக்களுக்கிடையில். இச்சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கை ஒரு கேடா?
இதுமட்டுமா? “நாம் தொழிலாளியை அவனது தொழில் சக்கரத்துடன் சேரவைத்து இறுகக்கட்டி விடுகிறோம். அவன் தன் சூழ்நிலைகளையும் நிலைமைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான எந்தவகையான வாய்ப்புகளும் அவனுக்குக் கிட்டமுடியாமல் அவற்றிலிருந்து அவனை விலக்கி வைக்கிறோம். பண்பாடுடைய மக்களின் உயர் எண்ணங்கள், பரந்த அனுதாபங்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு நல்வாழ்வடைதற்