உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 44

1937-ல் நடைபெற்ற உலகப் பொருளியல் மாநாட்டில் சேம்பர்லேன் கூறினார்.

வையனைத்தும் நல்லதே, பாராட்டுவதற்குரியதே. ஆயினும், கடைசியில் அதுவே பல கேள்விகளாக விடுகிறது. இதிலிருந்து இயற்கையான கேள்வி ஒன்று எழுகிறது. இம்மாபெரும் உற்பத்திப் பெருக்கம் மக்கள் வறுமையைப் போக்க உதவிற்றா? பாமரர்களின் துயரங்களையும் திக்கற்ற தன்மையினையும், குறைக்க உதவிற்றா? காலடியில் கிடந்து நையும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் மிக அவசியமான தேவைகளை ஒரு சிறிதளவாவது நிறைவேற்ற உதவிற்றா? இவற்றிற்கு மறுமொழி தெளிவான பதில் 'இல்லை' என்பதே. மக்கள் இன்னும் பட்டினியாகவேயிருக்கிறார்கள். குளிர் மிகுந்த ஊதற் காற்றில் ஆடவரும் பெண்டிரும் ஆடையின்றி நடுக்கத்துடன்தான் செல்கின்றனர். முதலாளித்துவ நாகரிக நாடுகளில் இளைஞர்களுக்கு இன்னும் வயிற்றுக்கு உணவு காண்பதே ஒரு தீராத பெரும் பிரச்சினையாயிருக்கிறது. உயிர் வாழ்வது எப்படி என்ற கவலையே இன்னும் உலகின் சிறந்த மூளைகளை வதைத்து வாழ்வை அரித்துத் தின்கிறது. இவற்றுக்குக் காரணம் என்ன?

உணவு, உடைகளோ ஏராளமாயிருக்கின்றன. மற்ற இன்றியமையாப் பொருள்களும், இன்பப் பொருள்களுங்கூட ஏராளமாகவே இருக்கின்றன. பசியால் நொந்தவர்களும், ஆடையற்றவர்களும் நிரம்ப இருப்பதால் இவற்றுக்கான தேவைகளும் மிகுதியாகவே உள்ளன. ஆயினும், இச்சரக்குகள் விற்கப்பட முடிவதில்லை. வாங்கப்படவும் முடிவதில்லை. தேவை மிக்கவர்கள் உண்ண உணவில்லாமலும் உடுக்க உடையில் லாமலும், இருக்கின்றனர். இவை ஏன்? இவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லாத குறைதான். அவர்களிடம் தேவையிருந்தும் அத்தேவை (பணமின்மையால்) நிறைவேறுவ தில்லை. வாங்கும் விருப்பம் அவர்களிடம் உண்டு; வாங்கும் ஆற்றல் தான் கிடையாது. இதன் காரணம் உலகெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மிகுதியாய் இருப்பதே.

முதலாளித்துவம் உலகில் கோடிக்கணக்கான மக்களை வீடற்றவர்களாகவும், நாடோடிகளாகவும் ஆக்கியிருக்கிறது.