உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

முறையைக் குறைகூற

அப்பாத்துரையம் - 44

வேண்டியவர்களாயிருக்கிறோம். முதலாளியிடம் இருக்கக்கூடிய குற்றமெல்லாம், அவன் பேராவலுக்கும், செல்வப் பித்துக்கும் அடிமையாயிருக்கக் கூடுமென்பதும், பணத்தினால் வரும் மதிப்பு, அதிகாரம் ஆகியவற்றின் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அவன் அவற்றின் பிடியிலிருந்து விடுபட முடியாதவனாயிருக்கக்கூடும் என்பதுமே. ஆனால், மனித இயற்கையின் இக்குறைபாடுகளை நாம் அனுதாபத்துடன் தான் கவனிக்க முடியும்.

ஒருபுறம் சரக்குகள் பெரிய அளவில் உற்பத்தி செய்யப் பட்டுக் குவிப்பதும், இன்னொருபுறம் அவற்றை வாங்கப் பொதுமக்களிடம் பணமில்லாதிருப்பதும் ஆகிய இந்நிலைமை களின் பயனாக உற்பத்தியான பொருள்கள் விற்கப்படாமல் போகின்றன. பண்டக சாலைகளில் பண்டங்களின் இருப்பு மிகுதியாகிறது. வர்த்தகர்களால் அவற்றை வெளியேற்ற முடியவில்லை. நாள் செல்லச் செல்ல இப்பண்டங்கள் பண்டகசாலைகளிலேயே கிடந்து மக்கி அழிவுறுகின்றன. புழு பூச்சிகள் தின்று அழிக்கின்றன. கெட்டும் அழுகியும் பெரும் பகுதி எறியப்பட வேண்டியதாகிறது. இவ்வழிகளில் இயல்பாய் அழியாதபோது வருந்தத்தக்க, வியக்கத்தக்க, திகைக்கத்தக்க வழியில் அவற்றை மனமார முதலாளிகளே அழிக்க நேருகிறது.

சரக்குகள் ஆதாயமான விலையில் முழுதும் விற்கப்பட முடியாத அளவில் உற்பத்தியாய்விட்டன என்று முதலாளிகள் கண்டால் அவர்கள் அவற்றை மனமார அழிக்க முற்படுகின்றனர். இம்முறைக்கு மாற்றான மற்ற முறையை - விலை தாழ்த்தி விற்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில் அதனால் அவர்களுக்கு மேலும் சங்கடங்கள் உண்டாகும். விலைகள் தாழ்ந்துபோவதை அவர்கள் விரும்புவதற்கில்லை. விலைகளை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகக் கிட்டத்தட்ட பித்துக் கொள்ளிகள் செய்வது போலவே அவர்களும் கோடிக்கணக் கான 'டன்' பருத்தியைச் சொக்கப்பானை கொளுத்தவும், ஆயிர, பதினாயிரக்கணக்கான ஆரஞ்சுப் பழங்களைக் கடலில் அமிழ்த்தித் தள்ளவும் செய்கின்றனர்.

முதலாளித்துவத்தின் அறிவுக்கு முரண்பட்ட பரிதபிக்கத் தக்க நிலை இது. பசியால் வாடுகின்ற போதிய உடையற்ற