உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 44

நூலும், மருந்துச் சரக்குகள், கனிப்பொருள்கள் அடங்கிய கலங்களும் அவனிடம் இருந்தன. கந்தகப் புகையும், பல வகை ஆவிகளும் அவன் அறையில் அடிக்கடி நடமாடின. பேயின் தொடர்புடைய சூனியக்காரரின் சின்னங்களாக வை கருதப்பட்டன.

சூனியம் வைப்பதும், அதை அகற்றுவதும் பேயின்

உதவிபெற்ற செயல்கள் என்று நாட்டுப்புற மக்கள் எண்ணினர். முன்னது நம்பிக்கை அடிப்படையானது! பின்னது சோதித்துப் பார்க்கத்தக்கது. கில்லியட்டின் சூனியத்தாலேயே தன் வீட்டுக் கிணற்றிலுள்ள தண்ணீர் கெட்டு வருவதாக ஒரு பெண் கருதினாள். அவனை இட்டுச் சென்று அவள் அதைக் காட்டினாள். அவன் சில கேள்விகள் கேட்டான்.

"கிணற்றருகே சாக்கடை செல்கிறதா?”

“ஆம்”

“அதை வேறுபுறம் வெட்டிவிட்டாலென்ன?”

66

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சாக்கடையின் போக்குக்கும் கிணற்றுத் தண்ணீருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? தொடர்பு இருந்தாலும் ஒரு பேயின் ஆற்றல் உதவி செய்தாலல்லாமல் அதை எப்படி காண முடியும்” என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். கில்லியட் மறுமொழி கூறவில்லை. தானே சென்று அதை வெட்டித் திருப்பினான். தண்ணீர் இரண்டு நாளில் செம்மைப்பட்டது.

த்

"மாயத்தால் தானே அவன் கிணற்று நீரை மாற்றினான்; மாயத்தாலேயே அவன் அதைக் கெடுத்திருக்க வேண்டும்" என்பது இதன் மூலம் அவளுக்குத் தெளிவாயிற்று.

ம்

பெண்களை விரும்பாதிருப்பதும், திருமணம் செய்யா திருப்பதும் பேய்ச் சூனியக்காரர்களுக்குரிய இலக்கணங்களுள் சில. இதையும் ஒரு பெண் தேர்ந்து பார்த்துவிட்டாள்.“அயலில் குடியிருக்கும் அன்பரே! நீர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்றைக்குத்தான் ஒரு மனைவியைக் கட்டிக் கொள்ளப் போகிறீர்?” என்று அவள் கடிதம் எழுதினாள். இதற்கு அவன் "கடற்கரைக் குத்துக்கல் என்றைக்குக் கணவனை