உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

65

காலனான கொடும் பாறைகளும் பல இருந்தன. நாள் தவறினாலும் வாரந்தவறாமல் அக்கடற்கரையருகே படகுகளும் கப்பல்களும், கடற்பாறைகளுக்கும் புயலுக்கும் இரையாகத் தவறுவதில்லை. இவ் அழிவுகளையெல்லாம் கவனித்து அப்பக்கங்களில் கடலோடிகளுக்குத் தோன்றாத் துணையாக லெத்தியரி இருந்து வந்தான். அவனால் உயிர் அளிக்கப்பெற்றுக் காப்பாற்றப்பட்டவர் பலர்.

லெத்தியரியின் ஆதரவுபெற்ற இளைஞருள் ராந்தேன் ஒருவன். பாரிஸிலிருந்த அவன் தாயும் பல தீய தொழில்களில் ஈடுபட்டு அதன் காரணமாக மீளாக் கடுஞ் சிறைப்பட்டனர். சிறுவன் ராந்தேன் பாரிஸ் தெருக்களில் அலைந்து கொண்டிருந் தான். லெத்தியரியின் கடற்பயணங்களின்போது, அவன் அச்சிறுவனைக் கண்டு இரங்கி, அவனைத் தன்னுடன் கொண்டு வந்தான். அவன் உடல் வலிமையும் அறிவுக்கூர்மையும் உடையவன். அவனிடம் லெத்தியரியின் பாசம் வளர்ந்தது. அவனை லெத்தியரி தன் கப்பற்றொழிலில் அமர்த்திப் படிப்படியாக உயர்த்திப் பங்காளி ஆக்கியிருந்தான்.ராந்தேனும் நாள்தோறும் உழைத்து ஈட்டி அதில் சிறிது

பணம்

போட்டிருந்தான். ஆனால், திடுமென ஒருநாள் ராந்தேனைக் காணவில்லை. லெத்தியரியின் பணத்திலும் நாற்பதினாயிரம் வெள்ளி அவனுடன் மறைந்தன. லெத்தியரியின் செல்வ நிலைக்கு இது ஒரு பேரிடியாயிற்று.

தளரா உள்ளமுடைய லெத்தியரி இதிலிருந்து தன் மதிப்பை மீட்கப் புதிய திட்டங்களிட்டான்.

அது பாய்க்கப்பல்களின் காலம். நீராவிப் படகுகள் அப்போதுதான் உலகில் தோன்றியிருந்தன. கப்பல், படகுத் தொழிலில் ஈடுபட்டவர் யாவரும் புதிய கப்பலை எதிர்த்தனர். சமயவாதிகள் தீயும் நீரும் கலந்த இந்நீராவிச் சக்தியை கடவுளுக்குப் பகைவனான பேய்மகன் ஆற்றல் என்று தூற்றினர். அதுமட்டுமன்று. அந்நாளைய அறிவியற் கழகங்கள் கூட இப்புது முறையைக் கண்டித்தன. கெர்ஸ்னியிலோ பழமையின் பிடி மக்களை இன்னும் மும்மடங்காகப் பிணித்திருந்தது. ஆயினும் லெத்தியரி துணிந்து புதிய நீராவி இயந்திரம் ஒன்று தருவித்தான். அதைச் செய்ய லெத்தியரியே திட்டம் தந்தான். ஃவிரஞ்சுப்