உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 44

பொறியாளன் ஒருவன் அதைச் செய்து கொடுத்தான். லெத்தி யரியே நேரில் இருந்து கப்பல் கட்டினான்.

சட்டை

பழமைப் புயலையும் புதிய கடற்புயலையும் ஒருங்கே

பண்ணாது எதிர்த்த வாரந்தோறும் ஸெண்ட் ஸாம்ப்ஸனிலிருந்து ஃவிரஞ்சுக் கடற்கரையிலுள்ள ஸெண்ட் மலோத் துறைக்கு நீராவிக்கப்பல் வாணிகச் சரக்குகளும் ஆட்களும் ஏற்றிச் சென்றது. விரைவில் கப்பல் கழகம் வளர்ந்தது. எதிர்ப்புகளும் பழைய கப்பல் தொழில்களின் எதிர்ப்பளவில் குறைந்தன. ராந்தேன் கொண்டு சென்ற பணம், புதிய முயற்சிக்கு வாங்கிய கடன் ஆகிய இரண்டுமே ஆதாயங்களால் அடை பட்டன. ஆண்டுக்கு ஆயிரம் பொன்னுக்குக் குறையாமல் லெத்தியரிக்குக் கிட்டிற்று. அவன் பெயரும் வெறும் லெத்தியரி என்ற நிலையிலிருந்து திரு. லெத்தியரி ஆக உயர்ந்தது. 'உயர் திரு' ஆகவும் தொடங்கியது. திருத்தகு, பெருமகனார், கோமகனார் ஆகிய படிகளும் வருங்காலத்தின் கருவில் காத்திருந்தன என்று பலர் கூறத்தொடங்கினர்.

புதிய கப்பலுக்கும் தன் வளர்ப்புப் புதல்விக்கும் லெத்தியரி ஒரே தெய்வ குரவரின் இரு பெயர்களை வைத்தான். டெரூசெட் என்பதன் மறுபெயரான டியூராண்டு கப்பலின் பெயராயிற்று. டெரூசெட் தனக்கு ஒரு புதல்வியென்று அவன் கருதினான். அவன் உயிர்கப்பல்மகவின் மீதும் பெண்மகவின் மீதும் ஒரு படியாகவே படர்ந்திருந்தது.

கப்பல் மகவுக்குக் கணவனாகத் திரு. குளூபின் அமர்த்தப்பட்டான்.ராந்தேன் தெறுதலைத் தனத்தை முன்கூட்டி அறிந்து அவன் எச்சரித்திருந்தான். ராந்தேனைப் போலவே அவன் உடல் வலிமையும் திறமும் உடைய கப்பலோட்டி, அத்துடன் தன் குடும்ப மதிப்பிலும் நேர்மைப் புகழிலும் அவன் ஓயாத அக்கரை செலுத்தியிருந்தான். எனவே லெத்தியரி தன் கப்பலுக்குரிய பொறுப்பை அவனிடம் விடத் தயங்கவில்லை. ஆயினும் குளுபினை விடத் தகுதி வாய்ந்த ஒரு ஆளை அவன் தேடாமலிருக்க முடியவில்லை. குளூபின் தன் கப்பல்மகவுக்கேற்ற மருமகன். ஆனால், தன் பெண்மகவுக்கேற்ற மருமகனல்ல. இரு மகவுகளையும் ஆண்டு இயக்கவல்ல ஓர் இளைஞனை அவன் உள்ளம் நாடிற்று.