உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

67

லெத்தியரியின் எளிய முரட்டு வாழ்க்கைக் கோட் பாட்டிற்கு ஒரே ஒரு விலக்கு இருந்தது. பெண்கள் எப்போதும் மென்மையான, அழகிய, தூய, வெண்ணிறக் கரங்கள் உடைய வராயிருக்க வேண்டுமென்று அவன் கருதினான். அத்தகைய கையைத் தேடியே அவன் இளமைக்காலக் காதல்கள் கருகின. இரண்டே இரண்டு பெண்கள் தான் அவன் குறிக்கோளுக்குரிய உடையவராயிருந்தனர். ஆனால் ஒருத்தி குணங்கெட்டவள். மற்றொருத்தி குடிகெட்டவள். இருவரையும் அவன் வெறுத்து ஒதுக்கினான்.

கைகளை

காதலின் தோல்வி, புதல்வி வளர்ப்பில் அவன் ஊக்கத்தைப் பெருக்கிற்று. அவள் கையழகே அவனை அவளிடம் பாசம் கொள்ளச் செய்தது. அதை எவ்வகையிலும் பாதுகாக்க அவன் முனைந்தான்.தோட்ட வேலையின் பயிற்சி தவிர, டெரூசெட்டை அவன் எதுவும் செய்ய விடுவதில்லை. கடலுடன் போராடும் விலங்காக அவன் வாழ்ந்தான். வானிற் பறக்கும் பறவையாக அவளை வளர்த்தான். வகைவகையான ஆடை அணிகள், கவலையற்ற இன்பக் கேளிக்கைகள், ஆடல் பாடல்கள் ஆகியவற்றில் குறைவற்று, டெரூசெட் மனித உருவம் படைத்த ஓர் இன்பப் பறவையாகவே வளர்ந்தாள்.