உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. கடலோட்டப் பந்தயம்

கில்லியட்டிடம் கெர்ஸ்னி மக்கள் கொண்ட வெறுப்பு அண்மையில் ஒரு சிறிது மாறியிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் கடலோட்டப் பந்தயத்துக்கு இவ்வாண்டு ஒரு புது முறுக்கு ஏற்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு டச்சுப் பாய்க்கப்பலே பரிசாகக் குறிக்கப்பட்டிருந்தது. பந்தயத்துக்கான படகு அடித்தளமில்லாத தட்டைப் படகு. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் சென்று படகு நிறையக் கல் ஏற்றிக்கொண்டு மீள வேண்டும். குறைந்த நேரத்திற்குள் மீள்பவனே வெற்றி பெற்றவனாவான்.

மிகப் பலர் போகும் பயணத்திலேயே சோர்ந்துவிட்டனர். மீதிப்பேரும் திரும்பு பயணத்துக்கு உடைந்தனர். கில்லியட் இப்படகின் பண்பறிந்து பாய்களின் தொங்கல்களைத் தளர்த்தியாகப் பிடித்துக் கொண்டான். இதனால் காற்றின் அளவுக்குத் தக்கபடி பாய்கள் விரிந்து சுருங்கின. போகும் பயணமும், வரும் பயணமும் வெற்றிகரமாக முடிந்தன. திரும்பு பயணத்தில் பந்தயத்துக்குக் குறிக்கப்பட்ட கற்களை மட்டுமன்றி, அவற்றிடையே கிடந்த ஒரு சிறிய பீரங்கியையும் விழாக்காலக் கேளிக்கைப் பொருளாக அவன் கொண்டு வந்தான்!

பந்தயத்தில் குறிக்கப்பட்ட பாய்க்கப்பல் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.

அது உறுதிவாய்ந்த பழைய கட்டுமானமுடைய கப்பல் அதை ஓட்டும் திறமுடைய பழைய கப்பலோட்டி இறந்த பின், யாரும் அதை ஓட்டவோ வாங்கவோ முன்வரவில்லை. பயன்படுத்தத் தக்கவர் விலைக்கு வாங்காதது கண்டே, அதைப் பரிசுப் பொருளாக்கிப் பயன்படுத்தக் கூடியவருக்கு அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். எனவே இப்பரிசு, பரிசு மட்டுமல்ல;