உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

69

கில்லியட்டின் தனிப்பட்ட அருந்திறத்துக்கும் அது ஒரு சான்றாயிற்று.

கெர்ஸ்னி மக்களில் இன்னும் ஒரு சில பேய் பக்தர் இருந்தனர். அவர்கள் இந்தத் தனித் திறத்தைக்கூட அவன் தனித்திறம் என்று ஏற்க மறுத்தனர். "படகை மனிதன் ஓட்டவில்லை. பேய்தான் ஓட்டிற்று. படகில் ஏறுமுன் அதில் அவன் ஒரு மாத்திரைக்கோலை நட்டு வைத்திருந்தான்" என்று அவர்கள் கூறினர். மாத்திரைக் கோலை யாரும் காணவில்லை. கண்டிருக்கவும் முடியாது. ஆனால், நம்பிக்கை இதனால் மாறவில்லை. மாத்திரைக்கோல் மாயமாத்திரைக் கோலாக வல்லவா இருக்க வேண்டும் என்று அவர்கள் விளக்கங் கூறினர்.