72
அப்பாத்துரையம் - 44
அவளுக்குக் கணவனாய், அவள் உடன் பிறந்தாளான டியூராண்டுக்கும் ஒரு திறமை வாய்ந்த மீட்காமனாய் இருக்க வேண்டும்! அவள் கணவனாயிளருக்கப் போதிய இளமையும், டியூராண்டின் மீகாமனாயிருக்கப் போதிய பயிற்சித்திறமும் அவனிடம் இருக்க வேண்டும்.
இந்த இலக்கணத்தை நினைத்துப் பார்த்தால் எந்த இளைஞனையும் அவன் டெரூசெட்டிடம் அணுக விடவில்லை என்பதில் நாம் வியப்படைவதற்கில்லை. வந்த ஒரு இளைஞனைக் கூட அவன் மறுத்து விட்டான்!
ஆனால், அதேசமயம் காதலே இல்லாத கில்லியட்டின் உள்ளத்தில் டெரூசெட் காதலை எழுப்பினாள். திருமணத்தை நினையாத அவன் நெஞ்சத்தில் அவள் திருமண எண்ணத்தைத் தூண்டினாள்.
ய
கில்லியட்டினிடம் அவள் தாய் இறக்கும்போது கொடுத்த ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதில் ஓர் இளம் பெண்ணுக்கு வேண்டிய ஆடை அணிமணிகள் யாவும் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஒரு அட்டைத் துண்டில் “உன் மனைவிக்கு, நீ திருமணம் செய்து கொள்ளும்போது!" என்று அன்னை தன் கைப்பட எழுதியிருந்தாள்! கில்லியட் இப்போது அதை அடிக்கடி எடுத்துத் திறந்துப் பார்ப்பான். அவ் ஆடை அணிமணிகளை அவன் தன் மனக்கண்முன் டெரூசெட்டுக்கு அணிவித்து அழகு பார்ப்பான்!
காதலின் ஆற்றல் பெரிது. படையின் ஆற்றல், நகர் காவல் படையின் ஆற்றல், வேவுப் படையின் ஆற்றல் ஆகிய எதுவும் அதற்கு ஈடல்ல. கில்லியட் அவ்வாற்றலால் டெரூசெட் என்ன நேரம் என்ன செய்வாள், என்ன நேரம் என்ன உடை உடுத்திருப்பாள் என்பதை அறிந்தான். அவள் விருப்பு வெறுப்புகள் யாவும் அவன் கற்றுணர்ந்தான்.
அவள் விரும்பிய மலர்கள், அவள் விரும்பிய காய்கறி கிழங்குகள் அவன் தோட்டத்தில் பயிராயின. யாரிடமிருந்து வந்தனவென்று தெரியாமலே டூஸ் கிரேஸ் என்ற பிராவேயின் பணிப் பெண்டின் மூலம் அவை பக்தனிட மிருந்து தெய்வத்திடம் சென்று சேர்ந்தன.