உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. “உறங்கினவன் விழிப்பதில்லை”

ஸென்ட்ஸாம்ப்ஸனில் சமய ஊர்வட்டத் தலைவராயிருந்த தூய திரு. ஜாக்கெமின் ஹேரட் என்பவர் வின்செஸ்டர் மாவட்ட முதல்வரின் துணைவராக உயர்வு பெற்றிருந்தார். அவரிடத்தில் புதிய ஊர்வட்டத் தலைவராக திரு. எபினிஸர் காட்ரே என்ற ஓர் இளைஞன் வரவிருந்தான். லென்ட் பீட்டர்ஸ் துறைமுகத்தில் சென்று மக்கள் அவனை வரவேற்கக் காத்திருந்தனர். ஆனால், அன்று கடலில் புயலும் பனியும் அடித்துக் கொண்டிருந்தன. இங்கிலாந்திலிருந்து புதிய தலைவரை இட்டு வரவிருந்த காஷ்மீர் என்ற கப்பல் வர நேரமாயிற்று. வழியில் புயலால் அழிந்து அமிழ்ந்த மற்றொரு கப்பலின் ஆட்களை மீட்பதில் 'காஷ்மீர்’ ஈடுபட்டிருந்ததனால், வருகை தாமதப்பட்டு வெற்றியுடன் வந்தது.

புதிய தலைவர் வந்து பதவி ஏற்ற சில நாட்களுக்குள் ஒருநாள் கில்லியட் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தான்.

ஸென்ட் சாம்ப்ஸன் துறைமுகத்தை அடுத்துத் தீவின் ஒரு நிலமூக்கின் நுனியில் காண்டாமிருகத்தின் கொம்பு போல ஒரு பாறை இருந்தது. வேலி இறக்கத்தின்போது அது கரையுடன் சேர்ந்தும், வேலிஏற்றத்தின் போது கரையிலிருந்து பிரிந்து கடலுக்குள் பாதிக்குமேல் அமிழ்ந்தும் இருந்தது. செங்குத்தாகப் பல ஆள் உயரம் உயர்ந்திருந்த அப்பாறையின் நடுப்பகுதி ஒரு சாய்வு நாற்காலிபோல அலைகளால் செப்பம் செய்யப் பட்டிருந்தது. அதைக் கண்ட எவரும் அதிலிருந்து கடற் காட்சி களைக் காண விரும்பாதிருக்க முடியாது. அந்த அவாவை இன்னும் தூண்டும் முறையில் அந்நாற்காலியைச் சென்றெட்டு வதற்கென்றே படியமைக்கப்பட்டதைப் போல் பாறையில் பல படிகள் அமைந்திருந்தன.