உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. குருட்டு நம்பிக்கையும் குருட்டு யோகமும்

ராந்தேன் காணாமற்போய்ப் பத்து ஆண்டுகள் ஆய்விட்டன. பேய்க்கப்பல் என்று பழிக்கப்பட்ட டியூராண்டு, ஸன்ட் ஸாம்ப்ஸனின் வாழ்விலும் கடற்கால் தீவுகளின் வாழ்விலும் நன்றாகப் பழகி ஒரு நிலையான இடம் பெற்று விட்டது.லெத்தியரி

டது. லெத்தியரி இப்போது ஸென்ட் ஸாம்ப்ஸன் துறைமுக மக்களின் முழு ஆர்வத்துக்கும் உரியவனாய் விட்டான். ஏனென்றால் ஃவிரான்சு நாட்டுக்கும் கெர்ஸ்னிக்குமிடையே யுள்ள வாணிபம், போக்குவரத்து முழுவதும் இப்போதுஸென்ட் ஸாம்ப்ஸன் மூலமே நடக்கத் தொடங்கிற்று.ஸென்ட் பீட்டர்ஸ் அத்தீவின் தலைநகரமாயிருந்தும் அதன் மதிப்புக் குறையத் தொடங்கிற்று. இதை உணர்ந்த ஸென்ட்பீட்டர்ஸ் நகரத்தார் லெத்தியரின் நீராவிக் கப்பலைத் தம் துறைக்கு மாற்ற வேண்டுமென்று அவனிடம் வேண்டினர். அதற்காக அவன் அவாவைத் தூண்டவும் முனைந்தனர். ஆனால், லெத்தியரி தன் தாயக ஊர்ப்பற்றில் உறுதியாக நின்றுவிட்டான். ஸென்ட் ஸாம்ப்ஸன் மக்களிடையே இது அவன் மதிப்பை மிகவும் உயர்த்திற்று அவன் அவர்கள் முடிசூடாமன்னன் ஆனான்.

தொழில் துறையில் தோல்வியுற்றவர்கள் வெளிப்படையாக லெத்தியரியைப் பாராட்டினாலும், உள்ளூர அவன் கப்பலுக்கு ஏதேனும் கெடுதல் வருவது உறுதி என்று நம்பிக் காத்திருந்தனர். சமயவாதிகளும் இவ்வெண்ணத்துக்கு மறைமுக உதவியா யிருந்தனர். ஏனெனில், லெத்தியரியின் சமயத்துறை பற்றிய கட்டற்ற பேச்சு அவர்களுக்கு பிடிக்கவில்லை. லெத்தியரி சமயத் துறையினர் என்றால் வெறுப்பவன். இது துறவுக்கோலமுடைய கத்தோலிக்க குருமார் கடந்து, மற்ற இல்லறக் குருமாரிடமும் பரவியிருந்தது. நம்பிக்கையும் மதிப்புமற்ற அவன், அவர்கள் குற்றங் குறைகளை எளிதில் கவனிக்கவும் சுட்டிக் காட்டவும் முடிந்தது. இது அவர்களுக்குச் சினமூட்டியது.