78
அப்பாத்துரையம் - 44
‘பூசனை செய்யும் குருமாரெல்லாரும் பண்பில் பூனையைப் போன்றவர்கள்' என்று வால்டேர் கூறுகிறார். லெத்தியரி இதை வாசித்தபோது, 'அப்படியானால் அப்பூனைகளை வெறுக்கும் நாயின் பண்பு என்னிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றான். குருமார் பொதுவாக அவன் புது நீராவி கப்பலை எதிர்த்தார்கள். இது, அவன் வெறுப்பை இன்னும் மிகுதி ஆக்கிற்று. ஊர்வட்டத் தலைவன் விவிலிய நூலுக்கு விளக்க உரை பகரும்போது நரகத்தின் கோர தண்டனைகளை விரித்துரைத்துக் கொண்டிருந்தான். கேட்பவர்கள் உள்ளத்தில் இவற்றின் படிப்பினைகளை உறுதிபடுத்த அவன் “கடவுளின் முழு நிறைவல்லமையை இவை காட்டவில்லையா?" என்று கேட்டான். லெத்தியரி ஒரு மூலையிலிருந்து “கடவுள் கருணையுடையவர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்றான்.
டியூராண்டின் வெற்றிகூட
வெற்றிகூட இந்நிலையில் கப்பல் தொழிலில் நீராவிக் கப்பலின் வெற்றியாக மாறவில்லை. பாய்க் கப்பல் கழகங்களுக்குச் செல்வர் முதலிடந்தர இன்னும் தயங்காது முன்வந்தனர். நீராவிக் கப்பலென்றால் இன்னும் தயங்கவே செய்தனர். ஒரு செல்வர் "நீராவிக் கப்பலா? அதில் ஒருநாள், இரண்டுநாள் பயணம் செல்வதற்குக் கேடில்லை, என்றேனும் ஒருநாள் தானே சாக வேண்டிவரும். ஆனால், முதலிடுவதனால், புகையிலும் கரியிலும் யார் முதலிடுவார்கள்” என்றார்.
லெத்தியரியின் வெற்றி நீராவியின் வெற்றி என்று எவரும் கொள்ளவில்லை. அவர் திறமையின் வெற்றி என்றும் எவரும் கருதவில்லை. அது அவருக்கு ஒரு நல்ல காலம்; அது அவர் குருட்டுயோகம் என்றுதான் பலரும் எண்ணினர்.
குருட்டுயோகம் என்று பிறர் நினைப்பதற்கேற்ப, ஒரு குருட்டு இடையூறு அதன்மீது தன் அம்பை எய்தது.