உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

81

கட்டினான். பின் பையைக் கவண்கட்டி எறிவதுபோல எறியத் தக்க ஒரு கயிற்றில் கட்டினான்.

கெர்ஸ்னி சென்ற பின், அவன் துறைமுகத்திலிருந்து கையில் பையுடன் எங்கோ கிளம்பினான். நெடுநேரம் சென்று அவன் திரும்பி வந்தான். ஆனால், அப்போது அவன் கையில் பை இல்லை.

மறுதடவை ஸென்ட்மஸோ வந்தபோதும், குளூபின் மீண்டும் துப்பாக்கி செய்யும் கருமானை அடுத்தான். அவன் குளூபினை நகரின் மிகப் பாழடைந்த பகுதியிலுள்ள ஒரு அரும்பொருள் விலையகத்துக்கு இட்டுச் சென்றான். அதன் பெயர் ஜாக்ரிஸேட் என்பது. ஜாக்ரிஸேட் வெளிப்படையாகப் பழம்பொருள் வாணிகக் களமாகக் காட்சியளித்தது. ஆனால், விலாசமுடைய உலகத்துக்கும் விலாசமற்ற உலகத்துக்கும் ஒரு பலமாக அது விளங்கிற்று. தங்க இடமற்ற ஏழைகள், விடுதலை பெற்ற குற்றவாளிகள், சிறு திருட்டு, வழிப்பறி செய்பவர், மோசடிக்காரர் ஆகியவர் ஒதுங்கி, குடிவரி கொடுத்தோ, கொடுக்காமலோ, வறுமையை மறைக்குமிடமாகவும் அது இருந்தது.

அவ்விடுதியில் பொன் வெள்ளி மாற்றுச் சித்து வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவன் இருந்தான். சித்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையால் ஏழையர்களிடமிருந்து பிழிந்த பணத்திலிருந்து விடுதித் தலைவி அவன் தொழிலுக்கு இடமும் உதவியும் கொடுத்தாள். வீட்டின் எரிக்கத் தக்கபொருள் எதையும் நாற்காலிகள், பெட்டிகள், ஏணிகள், விட்டம், வரிச்சுல்கள் யாவும் - அவனால் உலோகப் புடங்களுக்காக எரிக்கப்பட்டு வந்தன.

கருமான் வந்த செய்தி கூறவே, சித்தன் சுழல் துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்தான். அவன் அதற்கு ஆறு ஆங்கிலப் பொன் விலை கூறினான். கருமான் குறைத்துக் கேட்டும் அவன் இணங்கவில்லை. ஆனால், குளூபின் பேசாது அவனிடம் அவன் கேட்ட ஆறு பொன் கொடுத்துவிட்டு மீண்டான்.