உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

175

இருந்தது. ஆனால், இந் நிலையிலும் அவர் சார்ல்ஸ் இன்ன இடத்தில் அடக்கஞ் செய்யப்பட விரும்பினார் என்பதை நினைவு மாறாமல் காட்டினராம்.

ஆங்கில மொழியின் தனிப்பெருஞ் சிறப்புக்களிடையே, யாராலும் புனைந்து பின்பற்ற முடியாதவற்றுள்ளும், பிற மொழிகளில் மொழி பெயர்க்க முடியாதவற்றுள்ளும் சார்ல்ஸ் லாமின் இனிய கட்டுரைத் தொகுதியும் ஒன்று என்பதில் ஐயமில்லை. அவற்றைப் படிப்போர் அதன் சொல்லழகில் மட்டுமன்றி நேரிய நுண்ணாடையின் படியிற் காணும் உடலழகேபோல் அவற்றில் கரந்துகிடக்கும் அவரது குண அழகின் திறங்கண்டு உவப் படைந்து அவரிடம் மாறாப் பற்றுக்கொள்வர் என்பது உறுதி.