ஆங்கிலப் புலவர் வரலாறு
203
ஆசிரியர்கள் வாழ்க்கைகளைப்போலத் தனிப்பட்ட சிறப்புடை யவை அல்ல. ஆனால், அவர் கவிதை பொதுமை யிலும் தனிமை யிலும் சிறப்புடையது. அவர் காலத்தில் அவர் எழுதியவை எல்லாம் - எழுத்துக்கெழுத்து பொன்னெடை மதிப்புடையவை யாகக் கருதப்பட்டன. அவர் இளமைக் காலப் பாக்களை விட அக்கால அறிவுலக வாழ்விலும் கருத்துக்களிலும் மூழ்கிச் செம் பாகமான கவிதை உருவில் தந்த அவருடைய பிற்காலப் பாக்களே அவர் நாளில் போற்றப்பட்டன. அந்நாளில் சிலர் கூறிய குறைகூட 'மாடு' முதலிய பாடல்களின் தலைமறிந்து காணப்பட்ட இளமை உணர்ச்சிகளை மட்டுமேயாம். ஆனால், அவர் காலத்துக்கு இப்பால் இக் கருத்துக்கள் ஆற்றலிழந்தன. அதோடு நீண்ட பாடல்களில் ஆற்றல் கெடாது பாடும் திறம் டெனிஸனிடம் இல்லை என்பதும் பிற்காலத்தில் நன்கு கவனிக்கப் பட்டது; படவே அவருடைய பிற்கால இடைக்காலப் பாக்களின் மதிப்புச் சற்று உயர்ந்து தாழ்ந்து மாறத் தொடங்கிற்று. அப்போதுதான் அவர் இளமைக்காலப் பாட்டுக்களின் என்றும் மாறா இயற்கைச் சிறப்பு வெளிப்பட்டது. உண்மையில் 'முன்னைய நினைவுகள்' 'மாடு' முதலிய நீண்ட பாக்கள் எழுதியிராவிடினும்கூட டெனிஸன் கீட்ஸுடன் ஒப்பாக வைத்தெண்ணத்தக்க இயற்கைப் பெருங் கவிஞரேயாயிருப்பர் என்பது உறுதி. அது மட்டுமன்று; கீட்ஸிடமில்லா இரு பெருஞ் சிறப்புக்கள் அவரிடம் உள்ளன. அவர் போன்ற கலைஞர் தம் கவிதைகளை ஓயாது செப்பனிட்டுத் திருத்தி இனித் திருத்த முடியா நிறைவு தருபவர். அதோடு புதிய அறிவியல் ஆராய்ச்சியின் திறங்கண்டு அதனைக் கவிதை உலகிற்குத் தருபவர். பத்தொன்பதாம் நூற்றாண்டு மாபெருங் கவிஞர் நிறைந்த நூற்றாண்டாயினும் அதில் அவர் நடுநாயகமாய் எல்லா வகைப்பட்ட கவிஞருக்கும் இணைப்புப் பாலமாய் விளங்கினார் என்பதில் ஐயமில்லை.