இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
174
அப்பாத்துரையம் - 7
காட்சியளித்தார். ஆனால், பிரின்ஸ்டன் கலைக்கூடத்துக்கு அவர் அறிவுத்தெய்வ மாகவும், உலகத்துக்கு அறிவியற் புரட்சி வீரராகவும் விளங்கினார்.
ஐன்ஸ்டீன் அறிவால் உலகம் பயன்பெற்றது. அவர் அருள் திறத்தால், உலகவாழ்வு அழகு பெற்றுள்ளது என்னலாம்.