பக்கம்:அமர வேதனை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

எனது படைப்புகளில் 'ஸினிக்'தனமே ஓங்கிய தொனியாக ஒலிப்பது பெரும் குறையாக 'நன்னம்பிக்கைவாதி'களுக்குத் தோன்றலாம்.

இதற்கு வாழ்க்கை, நாட்டு நிலைமை, காலத்தின் போக்குகளே பொறுப்பு ஆகும். என்னுள் சிறுபிராயம் முதலே முளைத்தெழுந்து வளரும் 'ஸினிக்'தனம் கொழுத்துச் செழிப்பதற்கே இவை துணைபுரிந்துள்ளன. இந்த இருண்ட 'நம்பிக்கை வறட்சி'யை கொன்று மிதித்து விட்டு, அந்த இடத்திலே ஒளிமயமான 'நன்னம்பிக்கை' மலர்ந்து மணம் பரப்புவதற்கு, தமிழ்நாட்டின் அரசியல், சமுதாய, பொருளாதார, இலக்கியச் சூழல்கள் உதவி புரியவில்லையே !

வாழ்க்கையும் காலமும் என்னுள் எழுப்பிய - எழுப்புகிற - உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தான் நான் எழுத்தாக்கி வருகிறேன்.

இவற்றை பிரசுரித்த 'எழுத்து' 'இலக்கிய வட்டம்' 'செளராஷ்டிர மணி' 'சிவாஜி' 'குருக்ஷேத்ரம்' 'சிவகாசி' 'முரசு' 'கவிதா மண்டலம்' ஆகியவற்றுக்கு என் நன்றி உரியது.

என் கவிதைகளே தொகுப்பு உருவில் வெளியிட முன்வந்த 'எழுத்து பிரசுரம்' சி. சு. செல்லப்பாவின் அன்புக்கு என் வணக்கமும் நன்றியும்.

வல்லிக்கண்ணன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/10&oldid=1278915" இலிருந்து மீள்விக்கப்பட்டது