பக்கம்:அமர வேதனை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உம்மை சுரண்டி
ஏற்றம் கொண்டிட
வழி வகுத்து வாழ்கிறார்!

நீவிர்-
அன்று போல் இன்றும்
ஏழையாய் தரித்திரமாய்,
பட்டினிப் படையினராய்,
உண்ண உணவும்
உடுக்க உடையும்
உறையுள் வசதியும்
பெற்றிட இயலாப் பூச்சிகளாய்
உழைத்துச் சலித்து
வரிகளும் உயர்விலைகளும்
கொடுத்துச் சோர்ந்து
புலம்பித் தவிக்கிறீர்!
எனினும்,
எவர் ஆண்டால் நமக்கென்ன
என்றே நாளோட்டுறீர்!

என்றும் ஒன்று போல்
வாழ்ந்திடக் கற்ற,
ஹே பாரத புத்திரரே!
நீர் என்றோ விழிப்படைவீர்?

1973

10

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/12&oldid=1278938" இலிருந்து மீள்விக்கப்பட்டது