உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யாரே அறிவர்!

ஒரு இல்
ஒரு வில்
எனக்
கொள்கை கொண்டு
வாழ்ந்து காட்டினை!
ராமா! நின்
ராஜ்யம் இங்கு
வரல் வேண்டுமென
விரும்பினர் பலரே!
விரும்புவோர்
இன்றும் உளரே!

எனினும்,
இன்று நீ
இந்நாட்டிடை வந்திடில்
உன் நிலை என்னாகுமோ,
யாரே அறிவர்?
மீண்டும் கானகம்
ஏறிட நேருமோ?
இருட்டடிப்பில் ஆழ்வையோ?
அன்றிக்
குண்டடி பட்டுச் சாவையோ?
யாருக்குத் தெரியும்!

ரகரகத் துணைவியர் பலப்பலர்;
சுரண்டிப் பிழைத்திட
உற்ற கருவிகள் பலப்பல!

வல்லிக்கண்ணன்

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/13&oldid=1895254" இலிருந்து மீள்விக்கப்பட்டது