பக்கம்:அமர வேதனை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயல்பு

காற்று
சுற்றிச் சுழலுது;
சீறுது. சாடுது.
தாவிப் புரண்டு
சன்னல் கதவை
தடாலெனத் தாக்குது
முட்டி மோதி முனகுது
விம்முது; வீரிட்டோடுது.
பெருமூச் செறிந்து
ஓய்ந்து ஓடுங்குது
செயலற்றவன் போலே
பம்மிப் பதுங்குது.

கடலில்
அலைகள் சீறி எழுந்து
பொங்கிப் புரண்டு,
தொலைப்போம் ஒழிப்போமென
வெறி கொண்டு தாவி
வீழ்ந்து எழுந்து
கரை நோக்கிப் பாயும்;
மோதும், சிதறும்.
நுரையாய் துளியாய்
உருக்குலைந் தழியும்,
முயன்று முயன்று
உழைத்தலுத் தோய்ந்திடும்
மனிதனைப் போலே.

16

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/18&oldid=1278942" இருந்து மீள்விக்கப்பட்டது