இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காற்றாய்
சுழலும் மனமும்
அலையாய்
பொங்கும் ஆசையும்
எழுந்தெழுந்து தோங்கும்
கனவும்
கொண்டுழைத்திடு மனிதரும்
ஓடியாடி
உழைத்துச் சலித்து
பலன் பெறாதகையில்
விதியினை நோவார்,
கடவுளை காய்வார்,
பிறறை பழிப்பார்,
வாழ்வே பாழாம்
புலம்பிச் சோர்வார்!
இது இயல்பு.
1972
வல்லிக்கண்ணன்