இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலுவையில் செத்த
ஏசுவின் புண்கள்
மீண்டும் கொட்டுது ரத்தம்!
மீண்டும் மீண்டும்
உயிர்க்கும் நித்தம்!
குண்டடி பட்ட
காந்தியின் இதயம்
மீண்டும் கக்குது ரத்தம்!
துயரால் சாகும் நித்தம்!
உண்மைக்காக
உரிமைக்காக
மனிதருக்காக
செத்த சாக்ரடீஸ்,லிங்கன்
புத்தன் வகையரா...
அத்தனை பேரின் ஆத்மாவும்
அமைதியற்றுத் தவிக்கும்
என்றும் என்றும்!
நித்தம்
சத்தியம் கொலைப்படல் கண்டு;
உரிமை பறிபடல் உணர்ந்து;
மனிதரை மனிதர்
தாக்குதல் நசுக்குதல்
கொல்லுதல் கண்டு.
மண்ணில் அங்கும் இங்கும்
அமர வேதனை