பக்கம்:அமர வேதனை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இனியவளே!

என்னைப் பிரிந்த

சின்னாட் களிலேயே

உன்னை நான் மறப்பேன்

என்று எண்ணி ஏங்கும்

என் அன்பே!கவலற்க!

உன்னை நான் மறக்கவும் கூடுமோ?


மழை

ஓயாது சளசளக்கிறது,

உன் பேச்சைப் போல.


நாய்

அடிக்கடி குரைக்கிறது,

உன் குறைகூறல் போல.


இரவுகளில்

ஆந்தையின் அலறல்

என் தூக்கத்தை கெடுக்கிறது,

உன் முணுமுணுப்பு போல.


கொசுவின் இரைச்சலும்

அதன் நீங்காக் கடியும்

என்னை எழுதப் படிக்க விடாது

தொல்லை தருக்கின்றன,

அமைதியை கெடுக்கும்

உன் தொணதொணப்பு போல.

அமர வேதனை
20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/22&oldid=1190938" இருந்து மீள்விக்கப்பட்டது