பக்கம்:அமர வேதனை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேண்டும்!ஆசைப்பட்டது அனைத்தையும்

எளிதில் தந்திட,எனக்கு

அலாவுதின் 'ஜீனி'போலே

அதிசய பூதம் வேண்டும்.

அதை 'வா'என அழைக்கவும்

பின் அது போய்ப் பதுங்கவும்

அவனுடை விளக்குப் போல

விளக்கொன்றும் வேண்டும்.


எண்ணிய போதெல்லாம்

எங்கெங்கோ அலைந்து திரிந்திட

விக்கிரமாதித்த வேதளம்

போன்ற தொரு தோழன்

எனக்கு வேண்டும்;

ஊர் உலகம் சுற்றிவர

உதவுகின்ற அதுவே

விதம் விதமாய் கதைகளையும்

சொல்லிடவும் வேண்டும்.


ஓட்டலிலே,ஸ்வீட் ஸ்டாலில்

கண்வரும் வனப்புடனும்

செவிக்கினிய பெயருடனும்

செவிக்கினிய பெயருடனும்

கொலுவிருக்கும் இனிப்புகளும்,

காரவகை உண்டிகளும்

விருப்பம் போல் வழங்கிட

ஒரு அமுதசுரபி எனக்கு

வாய்த்திடவும் வேண்டும்.


அமரவேதனை
24
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/26&oldid=1204048" இருந்து மீள்விக்கப்பட்டது