உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஏனோ?

பெண்ணே, நவயுவதி!
மின்னிடும் கண்ணை மூடி
கருநிறக் கண்ணாடி
அணிவதும் ஏனோ?
யுகம் யுகமாய்
கவிகள் பற்பலர்
கண்ணினைப்
புகழ்ந்ததும், புகழ்வதும்
தந்த கரிப்போ?
இஷ்டம் போல்
கண் சுழட்டி
கண்டு களிக்கச்
சூடிய மறைப்போ?
எது எனச் சொல்லுவாயே!

1971

வல்லிக்கண்ணன்

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/29&oldid=1896092" இலிருந்து மீள்விக்கப்பட்டது