பக்கம்:அமர வேதனை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நினைப்பு

சிடு சிடுக்கும்

சீற்றம் காட்டும்

சீரியஸ் முகமும்

சிந்தனை போஸும்

சதா கொண்டிடும்

சிற்சில பேரைக்

காணும் போதெல்லாம்

சிறுபிள்ளையாய்

இவரும் இருந்ததில்லையோ

என்றே என்னுளம்

எண்ணும்.


எட்டாக் கனவுகள்

ஏக்கம் கவலைகள்

திட்டம் குழப்பம் பலவும்

மண்டும் உளத்தராய்,

உர்ரெனு முகத்தராய்,

எப்பவும் தோன்றும்

சிலபேர் என்றுமே

சிறு பிள்ளையாய்

இருந்திலர் போலும்

என்றொரு நினைப்பு

என்னுளம் மேவும்.


கவலைகள்

தோன்றா உள்ளம்,


அமர வேதனை
28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/30&oldid=1192916" இருந்து மீள்விக்கப்பட்டது