இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏஏய்,
எண்ணியது உண்டா
என்றேனும் நீ?
உனக்கு நீயே அந்நியன்!
ஒவ்வொரு நபரும்
தனக்கு தானே அந்நியன்.
மனிதரை மனிதர்
புரிவது இல்லை.
தன்னைத் தானே
உணர்வதும் இல்லை.
பிறப்புக்கு முன்னும் இருட்டும்
இறப்புக்கு பின்னும் இருட்டும்
இடையில் எத்தனை இருட்டு!
தூக்கம்,மடமை,தன்னலம்,அகந்தை
இப்படி எத்தனை இருட்டு!
'உன்னை எண்ணிப் பாரு'
என்று சொன்னவன்
தன்னை உணர்ந்தவனில்லை.
மனிதன் எவனும்
தன்னை அறிந்தது இல்லை.
முற்றும்
உணரப் போவதும் இல்லை!
ஒற்றை
வாழ்வை வாழ்வதாய்!
வல்லிக்கண்ணன்