இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எண்ணும் நீ
எத்தனை வாழ்வு வாழ்கிறாய்
உனக்காய்,பிறர்க்காய்,
ஊருக்காய்,மதிப்புக்காய்,
மெய்யாய்,போலியாய்,
எத்தனை வாழ்வு வாழ்கிறாய்?
நினைப்பில்,எண்ணமாய்,
கனவில்,ஆசையாய்,
துயலில் கனவாய்
எத்தனை வாழ்வு வாழ்கிறாய்?
இன்று-நேற்று-நாளை
என்ற நினைவுத் தடத்தில்
எத்தனை வாழ்வு!
விழிப்பில் உணர்வொடு
வாழும் நீ
தூக்க நிலையில்
விழிப்பற்று,விசித்திர
வாழ்வு வாழ்கிறாய்!
உன்னை நீ உணர்வது இல்லை.
தன்னை தானே வென்று
ஆண்டவன் எவனுமே இல்லை!
எண்ணியது உண்டா இதனை?
எண்ணிப் பாரு சும்மா!
1968
அமரவேதனை