இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க்கை
என்றொரு புத்தகம்;
பக்கங்கள் எத்தனை
யார் அறிவார்?
வெள்ளேத் தாள்களை
அள்ளிச் சேர்த்து
புத்தகம் எனத் தந்த
பித்தன் எவனோ
யார் அறிவார்!
ஒவ்வொரு உயிர்க்கும்
தனித் தனிப் புத்தகம்
மெள்ள மெள்ள அதை
முடிக்கும் வேலையும்
அவ்உயிர்க்கேயாம்!
நல்ல புத்தகம் ஆக்கும்
நபரும் யாரே யாம்?
பிள்ளைக் கிறுக்கல்,
கோடுகள்,கீறல்கள்,
குழப்பச் சித்திரம்;
ஓடும் நீரில்
ஆடும் பூச்சி போல்
எழுதிடு வண்ணங்கள்;
பொருந்தாக் கோலம்.
வல்லிக்கண்ணன்