உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உன் கண்கள்

சூழ்நிலைப் பாலையில்
வாழ்க்கை வெயிலில்
சுற்றித் திரியும்
என் கண்களுக்கு
குளுகுளு ஒயஸிஸ்
ஆயின,அன்பே!
உன்னிரு விழிகள்!

அலுவல் அலைகளில்
எற்றுண்டு இடறி,
காகிதக் கடலில்
புரண்டு தவிக்கும்
என் விழிகள்
தங்கி இன்புற
பசுமைத் தீவாய்
உதவும், பெண்ணே!
உன் ஒளிக்கண்கள்.

1967

36

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/38&oldid=1895674" இலிருந்து மீள்விக்கப்பட்டது