உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


உள்ளத்தில் அரிப்பு.
ஊர் சுற்ற வேணும்!
சட்டையோ கிழிசல்
புகழை சட்டையாக
அணிய முடியுமா?

                         தெருவில் போனால்
                         தார் ரோடு பொசுக்குது.
                         புகழ் செருப்பு ஆகுமா?
                         கடும் வெயில் தாக்கி
                         மூளை குழம்புது: காத்திட
                         புகழ் என்ன குடையா?

குளிர் இரவில்
பனிக் காற்று
உடலை வாட்டுது.
புகழ் போர்வை இல்லையே!

                         பார்க்கப்போனால்
                         வெறும் புகழில்
                         என்ன இருக்கிறது?

                                                                          1966

38

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/40&oldid=1896360" இலிருந்து மீள்விக்கப்பட்டது