இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காத்திரு என்றாய்
காலமே!
நம்பினேன்;வாழ முயன்றேன்.
வருங்காலம் நமதே
எனும் நம்பிக்கை
என்னும் ஓர் தெம்பு தெம்பு வளர்ந்தது.
உன் இதயத் துடிப்பு போன்ற
கடியார டிக்கொலியும்,
உன் ஓட்டத்தை
அளவிட்டுக் கிழிபட்ட
காலண்டர் தாள்களும்
என்னை பாதித்ததில்லை.
நான் நம்பினேன்;
கனவில் வாழ்ந்தேன்.
நீ
மூடிய கண்ணனாய்
வறண்ட உளத்தனாய்,
உணர்விலா வெறியனாய்
ஓடினாய்,ஓடிகிறாய்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்!
காலமே!
வாழ்க்கை வெயில்
என் நம்பிக்கையை
பாழ் பண்ணிவிட்டது.
வல்லிக்கண்ணன்