உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அனுபவப் புயல்

கசப்புப் புழுதியை

என்னுள்

நிரப்பி விட்டது.


காக்கிறேன் இனி நான்.

காத்திருப்பாய் நீயே

என் இறுதி நாள்

என்று வந்திடும் என்றே!


வாழ்வது கொடியது

என்பதை

கணந்தோறும் உணர்த்துகிறாய்,

காலமே!

அன்பும் இரக்கமும்

ஊறும் உள்ளம் பெற்று

வாழ்வது எவ்வளவு துன்பகரமானது

என்பதை

அனுபவம் உணர்ந்தது!


1965


அமர வேதனை

40
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/42&oldid=1186270" இலிருந்து மீள்விக்கப்பட்டது