பக்கம்:அமர வேதனை.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் உள்ளத்தில் எண்ணங்கள்

அரும்பும் மொக்கு. விரியும் முகை. சிரிக்கும்
மலர்கள்.
மலர்ந்தும் மணமிலாப் பூக்கள்.
மணம் மிகப் பரப்பும் வெண்ணிற புஷ்பங்கள்.
வண்ணப் பூக்கள் வனப்பின் களஞ்சியம்.
உதிர்ந்த பூக்கள். வாடிய இலைகள். பசிய
கொடிகள். பழுப்புகள். தளிர்கள்
சருகுகள், செத்தைகள், குப்பைகள்.

என் உள்ளத்தில் எண்ணங்கள்

வருடும் தென்றல், நடுக்கும் வாடை.
வறண்ட கோடை, மண்வாசனை சுமந்த
மழை நேரக் காற்று. சுழன்றிடும் சூறை,
சாடும் புயல்.
வீதி மண்ணை விழிகளில் திணிக்கும் வீணக் காற்று.
பெரும் பெரும் பேய்க்காற்று.
இலை கூட மூச்சு விடா நேரத்து,
வதைத்திடும் புழுக்கம்.
புயலின் பின் அமைதி
இனிய சுகந்தம் புழுதி மண் சாக்கடைப்
புழுக்கம்; கரிக்கும் புகை மண்டிடும் நாற்றம்.

என் உள்ளத்தில் எண்ணங்கள்

தெய்வச் சிலையில் அர்ச்சித்த மலர்கள்
பிணத்தின் மீது கொட்டிய பூக்கள்
மணத்தம்பதிகள் இன்புறு கட்டிலில்
தூவிக் கசங்கிய புஷ்பங்கள்.

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/44&oldid=1278901" இருந்து மீள்விக்கப்பட்டது