பக்கம்:அமர வேதனை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டில் மலர்ந்த பூங்கொத்துகள்.
வயல்வரப்புகளில் சில்லெனச் சிரிக்கும்
இனம் தெரியாச் சிறுசிறு வண்ணப் பூக்கள்.
பாத்தியில் பூத்த ரோஜா, முல்லை, இருவாட்சி
எல்லாம்.
மரத்தடியில் பாவாடை பரப்பிய பவளமல்லி
இயற்கைச் செண்டுகள்; செயற்கைக் கதம்பம்.

என் உள்ளத்தில் எண்ணங்கள்

அகல் விளக்குகள், கார்த்திகை தீபக்
குளுமைச் சுடர்கள்.
சொக்கப் பனையின் செங்காப் பிழம்புகள்.
மின்சார விளக்குகள். மின்னல் கிறுக்குகள்,
ஒளிச் சிமிட்டல்கள்.
தீபாவளி இரவில் எங்கெங்கும் தெறிக்கும்
பட்டாசுச் சீறல்கள்; மத்தாப்புச் சிரிப்புகள்.
திருவிழாக் காலத்து தீப்பந்தச் சுழிப்புகள்.
அணைந்த தீவட்டியின் எரிந்த புகைச் சுருள்.
சாம்பிராணிப் புகையின் நறுமண நெளிவு.

என் உள்ளத்தில் எண்ணங்கள்

மழைக்கால ரோட்டின்
ஈரத்தில் விழுந்த பெட்ரோல்
தீட்டும் வர்ணக் கோலம்.
வானவில் வண்ணங்கள்.
ஓடும் நீரில் வீழ்ந்து சிதறும்
மழைக் குமிழ்க் குதிப்புகள்.
கல் விழுந்த நீர்ப் பரப்பில்

வல்லிக்கண்ணன்

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/45&oldid=1278903" இலிருந்து மீள்விக்கப்பட்டது