பக்கம்:அமர வேதனை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்

நான்

சோம்பலின் தொண்டனல்ல;

சுறுசுறுப்பில் எறும்பும் இல்லை.


நான்

தூங்கிக் கிடக்கவுமில்லை;

'விழு விழு என்று'

வேளை செய்து

அலுப்புறவும் இல்லை.


நான்

குழந்தைப் போல்

எதிலும் அதிசயம் காண்பதால்,

வேடிக்கைப் பார்த்து

நின்று விடுகிறேன்.

ஓடும் கால உணர்வு அறிவேனில்லை.


நான்

மாணவன் போல்

படிப்பில் ஆர்வம் காட்டுகிறேன்;

அதனால் செயல்திறம்

மறந்து போனேன்.


நான்

கடவுள் போல்

கவலையை உதறினேன்;

களிப்பே கொண்டேன்.


1964
வல்லிக்கண்ணன்
45
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/47&oldid=1201833" இருந்து மீள்விக்கப்பட்டது