பக்கம்:அமர வேதனை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெள்ளம்

ஆற்றில் புதுவெள்ளம்

எற்றிடும் அலைகள்

மேற்செல்லும் சுருள்கள்

நுங்கும் நுரையுமாய்

பொங்கிடும் வெள்ளம்.

சுழலுது,சுருளுது,

மோதுது,சாடுது,

ஓடுது ஓடுது

ஓடுது வேகமாய்

எதையோ முடித்திடல் போலே!

முடிப்பது எதுவுமில்லை

முடிவோ கடலிலே!


பட்டணத்துப் பாதையிலே

புரண்டிடும் ஜனவெள்ளம்

எத்தனை மனிதர்கள்!

எத்தனை எத்தனை ரகங்கள்!

தம்மிலே தாமாய்,

நினைவும் கவலையும்தமயோக்கி,

மிஷின் யுகத்தின்

அவசர நிழல்களாய்

அசைந்திடும்,நடந்திடும்

விரைந்திடும் உருவங்கள்!

பரத்திடும் கும்பல்...

இன்று போல் நாளை

நேற்று போல் இன்றென


அமரவேதனை
46
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/48&oldid=1197478" இலிருந்து மீள்விக்கப்பட்டது