உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பண்பு ஒன்றே

விளக்கைப் போட்டேன்
கொசுக்கள் ஆய்ந்தன.

இனிப்பைக் கொட்டினேன்
ஈக்கள் மொய்த்தன.

மிட்டாய் நீட்டினேன்
குழந்தைகள் சூழ்ந்தன.

புல்லைச் சிதறினேன்
ஆடுகள் சேர்ந்தன.

பணத்தை காட்டிடில்
மக்கள் கூடுவர்!

பார்க்கப் போனால்,
பண்பு ஒன்றே!
பண்பு ஒன்றே!

1963

வல்லிக்கண்ணன்

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/51&oldid=1896044" இலிருந்து மீள்விக்கப்பட்டது