இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆகா,
பெண்ணைப் பாரேன்
மலரின் குவியல்!
மலரின் குவியல்!
அவள் முகம் அழகு ரோஜா
கண்கள் கருநீலம்
இதழ்கள் மாதுளை மொக்கு
மேனி எங்கும்
தாமரை மொய்க்கும்
குளிர்புனல் தேக்கம்!
அவள் சிரித்தால்
மலரும் முல்லை.
அவள் முழுநிலா
அதில் ஐயம் இல்லை!
பார்வை அமுதம்
பேச்சு தேன் தேன்!
ஆகா!பெண்ணைப் பாரேன்
மலரின் குவியல்!
ஆசையோடு அவளைப் பார்த்து
திரும்பிப் பார்த்து,
உறுத்துப் பார்த்து,
மேலும் பார்வை வீசிடில்
அமர வேதனை