உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க்கை

முதலும் முடிவும்
காண முடியாக்
கருங்குகை வழியோ
வாழ்க்கை?
அதனுள் சிக்கிய
அப்பாவிப் பிராணியோ
மனிதன்

திறக்கும் கதவும்
மூடும் கதவும்
உணர்வில் புரியா
இருட்டறை தானா
வாழ்க்கை?
அதனுள் ஓடும்
கறுப்புப் பூனையை
தேடித் திணறும்
குருடான மனிதன்?

எட்டாத விண்ணோக்கி ஏங்கி,
கவலைச் சுமையால் குனிந்து,
மண்ணைப் பார்த்து மூச்செறிந்து,
காலப் பாழில் அடிபதியா தழியும்
அர்த்தமில் பயணியோ மனிதன்?
அவனை வருத்தும்
தண்டனை தானோ வாழ்க்கை?

1962

54

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/56&oldid=1896051" இலிருந்து மீள்விக்கப்பட்டது