உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குருட்டு ஈ

ஒளி நன்று; ஒளியே அமுதம்
அது இனியது; வாழ்வு தருவது
உண்மை; நான் மறுக்கவில்லை.

வெள்ளம் பெருகி ஓடினும்
நாய் நக்கியே குடிக்கும்.
வெள்ளமாய் ஒளி
வெளியை நிறைக்கிலென்?
உள்ளக் குகையில்
இருட்டே இருந்தால்
உலகமும் இருளாம்...

விளக்கை ஏற்றினேன்
வெடித்துச் சிரித்தது பேரொளி
கிர்..ர்ர்..கிர்
என்ன இரைச்சல்?
ஏனிந்தச் சுழற்சி?

ஒரு ஈ
சுற்றுது!சுற்றிச் சுற்றி,
சுழன்று மோதி,
விழுந்து எழுந்து,
மேலும் சுற்றிச் சுற்றி மயங்குது.
குருட்டு ஈ
இருட்டில்லை எனினும்
வழி புரியலை அதுக்கு!

வல்லிக்கண்ணன்

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/59&oldid=1896369" இலிருந்து மீள்விக்கப்பட்டது