உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளியெலாம் வெளிச்சம்.
அறையுளும் வெளிச்சம்.
நடுவிலே கதவு — அதில்
சட்டமிட்ட சதுரக் கண்ணாடி;
வர்ணமிலா வெறும் கண்ணாடி

அறைக்குள் ஒரு குருவி.
சிறகு விரித்துச் சிவ்வென்று பாயுது;
மோதி மீண்டும் பாய்ந்தது
மீண்டும் மோதி,
மீண்டும் மீண்டும்...
கண்ணில் குத்துது வெளியொளி;
கருத்தில் பதியலே இடைத்தடை!

வெளியின் ஒளி மட்டும் போதுமோ,
உள்ளத்தில் இருளே மண்டிக்கிடக்கையில்?

1960

58

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/60&oldid=1896368" இலிருந்து மீள்விக்கப்பட்டது