இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காலம்
என்னுள்ளே கவலைப்பயிரை வளர்க்குது
பயிரே எங்காவது
களையாக மண்டுமோ?
காலம்
மனித மனசிலே வளர்க்கும் கவலை
களையாய் ஓங்கிப் பெருகுதே!
காலம்
உள்ளத்திலே மகிழ்ச்சி மலரை
புஷ்பிக்கச் செய்வதாக
கவலையை கொல்வோம்
என்றது சிந்தனை.
காலம்
வளர்க்கும் கவலைகள்
காலச் சுவட்டால் அழிந்துபடும்.
கவலையை இளமைக்குப் பகை,
இன்பத்துக்கு மறலி,
சிரிப்பை எரிக்கும் நெருப்பு;
கவலையை ஒழிப்போம்;
கலையே கருவி என்றது சிந்தனை.
காலம்
துணே புரிந்தது.
எழுதியதெல்லாம் கலையாச்சு,
வல்லிக்கண்ணன்