பக்கம்:அமல நாதன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமலநாதன் புறப்பாடு

கொடியரினும் கோடியன். அந்தப்பாவி அதே தெரிகிறதே அந்த வீட்டில்தான் வசிக்கின்றான், அவன் நாசமா போக என்று திட்டும். வேகத்தில் வன்கண்ண்ன் வீட்டையும் காட்டிவிட்டனள். ' அல்லன் போல் ஆவனவும் உண்டு சில," என்பது முதுமொழி யாதலின் கிழவியின் வெறுப்பால் சிற்றப்பன். வீட்டை அறிந்தான் அமலநாதன்.

இவ்வாறு பலரும் பலபடி தன் சிற்றப்பனது கொடுர குணத்தைக் குறித்துக் கூறக் கேட்ட அமல் நாதனுக்கு மனத்தில் அச்சம் பிறந்துவிட்டது. ஆர்வ முடன் தன் சிற்றப்பனேக் காண இருந்த ஆசை அகத்தைவிட்டு அகன்றுவிட்டது. வந்தவழியே திரும் பிப்போகலாம் என்றுகூட எண்ணிவிட்டான். தான். தன் தந்தையாரின் நண்பரான ஆபத்சகாயரிடமே அடைக்கலம் புகுந்து 'இனி நீரே அம்மை, அப்பன், ஐயன், அன்புடை மாமன், மாமி, ஒப்புடைய மாகர், ஒண்பொருள், குலம், சுற்றம், பொன், மணி என்று கூறி ஆதரிக்குமாறு வேண்டிக்கொள்ளலாம்,' என்றும் தீர்மானம் கொண்டான்.

மீண்டும் தன் நிலையை எண்ணினன். தான் பதினெட்டாண்டு நிரம்பிய காளை என்பதும் இவனுக்கு நினைவுவந்தது. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? ஆகவே, நம்மை நாம் எப்படியும் காத்துப் பிழைத்துக் கொள்ள இயலும்,” என்று தீர்மானித்த வனுய், “ எதுவரினும் சரி; நாம் நாடிவந்த சிற்றப்பன்க் கண்டே திரும்புவோம்,” என்று திடங்கொண்டு, தனக்கு எதிரே காட்டப்பட்ட வீட்டினருகு வந்தும் றன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/12&oldid=1228723" இலிருந்து மீள்விக்கப்பட்டது