பக்கம்:அமல நாதன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அமலநாதன்


அமலநாதன் கன் வன்கண்ணன் வாசில் அடைந்த நேரம் கதிரவன் மேலைக்கடலில் விழுந்தநேரம், வன் கண்ணன் இல்லம் பரந்த வெளியில் இருந்தது. அக்கம் பக்கத்தில் வீடு செருக்கமாக இல்லை. இவன் வீடு தனித்து இருந்தது. மேலும், அது முற்றும் முடிக்க கட்டிடமாகக் காணப்படவில்லை. அறைகுறையாகவே இருந்தது. அந்த வீட்டை அடைய ஒழுங்கான பாதையும் கிடையாது.

வீடுகளில் மாலை நேரமானதும் விளக்கு வைத்தல் மரபு. ஆனால், அவ்வீட்டில் விளக்கே இல்லை. அதனோடு அவ்வீட்டில் மக்கள் நடமாடும் அறிகுறி எதுவும் காணப்படவில்லை. வீடும் சாத்தப்பட்டிருந்தது. வன்கண்ணன் வஞ்சகன், கபடன், ஆதலின், தன்னை வெளிப்படையாகக் காட்டி வாழ அஞ்சினன்.

கஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும நீர்ப்பாமபு-நெஞ்சில்
காவுடையார் தம்மைக் கரபர், கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்

.

என்பது உண்மையன்றே? அதாவது நல்ல பாம்பு தன்னிடம் விஷம் இருப்பதால் வெளிப்படாமல் புற்றில் மறைந்தே வாழும். ஆனால், நீர்ப்பாம்பு தன்னிடம் விஷம் இன்மையால், வெளியே அஞ்சாமல் உலாவும். இப்படியே வஞ்சகர் தம்மை மறைத்தே வாழ்வர். கபடற்றவர் வெளிப்பட்டு வாழ்வர்.

இப்படிப்பட்ட வாழ்வுடையவன் வீட்டை அமல நாதன் அண்டிக் கதவைத் தட்டினன். நீண்ட நேரம் தட்டியும் அவனே ஏன் என்று கேட்பார் எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/13&oldid=1228761" இலிருந்து மீள்விக்கப்பட்டது