பக்கம்:அமல நாதன்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமலநாதன்புறப்பாடு. 9

இலர். இவனும் இடைவிடாது திட்டியவண்ணம் இருக்கவே, இவன் கின்ற இடத்திற்கு மேலே ஒரு பல கணிவழியே ஓர் உருவம் தலை நீட்டுள்தை ஆயிர்கான். அவன் கையில் துப்பாக்கியும் இருந்த்து அவ் + வயது j கிழ : . தலையைக் கண்ட சிறுவன், கிறிது பின் வந்து மேலே இருக்கவரை உற்று நோக்கி, ! ஐயா, நான் ஒரு கடிதத்துடன் இவ்வில்லத்துக்குரியவரைக் காணவுக்துள்ளேன். அவர் உள்ளே இருக்கின்றனரா : என்று வினயமாகக் கேட்டான்.

கிழவரை மேல் இருந்தபடியே அந்த இளைஞனைப் பார்த்து உரத்த குரலில் அக்கடிதம் யாரால் கொடுக்கப்பட்டது? " என்று வினவினர். இளகுன் அந்தக் கேள்விக்கு அஞ்சி நேர்விடை கொடுக்கவில்லை. தான் கொண்டுவந்த கடிதத்தை உரிய வருக்குக் கொடுத்து அவர் கேட்டக்கால் இன்னரிட மிருந்து கொண்டுவந்ததாகக் கூறவியலும் என்று பதில் அளித்தான். ' அப்படியால்ை உன் பெயர் யாது? " என்ற விடை மேலே இருந்து வந்தது. அதற்கு விடை கூறத் தயங்காமல், தன் பெயர், அமலநாதன் என்று அஞ்சாது அறிவித்தான்.

    இப்பெயரைக் கேட்ட விருத்தன் சிறிது மனம்தடுமாறித் திடுக்கிட்டு உன் தந்தை உயிருடன் இருக்கின்றாரா ? அன்றி இறந்துவிட்டாரா?” என்று கேட்டனன். " அவர் இறந்துவிட்டார், ' என்று இளைஞன் பதில் கூறினன். அகனதன் பின்னர் வீட்டிற்குரிய கிழவனகிய வன்கண்ணன் கதவைத்திறக்க மாடியினின்று கீழே இரங்கி வந்தனன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/14&oldid=1228729" இருந்து மீள்விக்கப்பட்டது